Latestமலேசியா

கோலாகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்களிப்பின்போது உயர்மட்ட பாதுகாப்பு

உலுசிலாங்கூர், மே 9 – சிலாங்கூரின் கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இந்த சனிக்கிழமையன்று சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உயர் மட்ட பாதுகாப்பு அம்சங்களை உள்துறை அமைச்சு உறுதி செய்துள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ Saifuddin Nasution Ismail தெரிவித்திருக்கிறார்.

பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கு கணிசமான போலீஸ்காரர்கள் பணியில் ஈடுபடுவார்கள் . எனினும் பாதுகாப்பு பணியில் எத்தனை போலீஸ்காரர்கள் ஈடுபட்டிருப்பார்கள் என்ற விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். வாக்களிப்பு தினத்தில் பாதுகாப்பு அம்சங்களை ஒருங்கிணைப்பது தொடர்பாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ Razarudin Husain னுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் Saifuddin தெரிவித்தார்.

இரண்டாம் கட்ட பிரச்சாரக் காலம் முழுவதும் புகார்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். ஏதேனும் இருந்தால், அம்னோ மற்றும் DAP சின்னங்கள் தொடர்பான புகார் இணைக்கப்பட்டு, காவல்துறையின் விசாரணைக்கு அடிப்படையாக சேர்க்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். எனினும் மற்ற புகார்களில் ஆபத்தானதாகக் கருதப்படும் அறிக்கைகள் ஏதும் இல்லை. ஒன்று அல்லது இரண்டு விஷயங்கள் மட்டுமே புகார்களில் இருப்பதாக தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ Abdul Ghani Salleh குறிப்பிட்டுள்ளார் என Saifuddin விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!