Skechers புதிய GOrun Arch Fit 2.0 காலணிகள் மலேசியாவில் அறிமுகம்

கோலாலம்பூர், டிசம்பர்-13, மலேசியாவில் Skechers நிறுவனம், தினசரி ஓட்டப் பயிற்சியாளர்களுக்காக புதிய Skechers Slip-ins: GOrun Arch Fit 2.0 காலணித் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
5 கிலோமீட்டர் வரை குறுகிய தூர ஓட்டங்களுக்கு ஏற்ற வகையில் இந்த காலணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இப்புதிய தொகுப்பில், சிறப்பம்சமாக கைகளை பயன்படுத்தாமல் எளிதாக காலணியை அணியச் செய்யும் Hands Free Slip-ins தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வுகளும், 1 லட்சத்து 20 ஆயிரம் பாத அளவீடுகளின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்ட Arch Fit இன்சோல் அமைப்பு, கால்களுக்கு தேவையான ஆதரவை அளிக்கிறது.
இதனுடன், காலணியை உறுதியாக பிடித்து வைத்திருக்கும் Heel Pillow தொழில்நுட்பம், மென்மையான நடை மாற்றத்திற்கான M-Strike midsole, மிக இலகுரக cushioning, இயந்திரத்தில் கழுவக்கூடிய வசதி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த vegan பொருட்களும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
RM459 விலையில் கிடைக்கும் இந்த Skechers GOrun Arch Fit 2.0 காலணிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட Skechers கடைகளிலும், இணையத்திலும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.



