Latestமலேசியா

கோலாலம்பூரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்

கோலாலம்பூர், அக்டோபர் 12 – கோலாலம்பூரிலுள்ள வணிக வளாகம் ஒன்றில், உள்ளூர் இளம்பெண் ஒருவர் வங்காளத்தேசத்தைச் சேர்ந்த ஆடவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில், 20 வயதைக் கடந்த அந்தப் பெண் தனது காதலருடன் நெருக்கமாக இருந்தபோது, சந்தேக ஆடவன் அதைக் காணொளியாகப் பதிவு செய்துள்ளான்.

பின்னர், அந்தக் காணொளியை வெளியிடுவதாக மிரட்டி, பெண்ணின் காதலரை அங்கிருந்து செல்லுமாறு வற்புறுத்தியுள்ளான். அதன்பிறகு, அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக ஆடவனை அந்தப் பெண் இதற்கு முன்பு அறிந்திருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அவனைக் கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலைப் பெற ஊடகங்கள் முயன்று வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!