கோலாலம்பூர், மே-26 – கோலாலம்பூர், Jalan Pasar Baru-வில் உடம்பு பிடி மையம் என்ற போர்வையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மையத்தை குடிநுழைவுத் துறை முற்றுகையிட்டதில் 51 பேர் கைதாகினர்.
பொது மக்கள் கொடுத்த புகாரை அடுத்து 3 வாரங்களாக உளவுப் பார்த்து, அச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் இயக்குனர் Datuk Ruslin Jusoh கூறினார்.
கைதானவர்களில் மியன்மார், வியட்நாம், இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 37 பெண்களும் அடங்குவர்.
அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முதல் மாடியில் உடம்பு பிடி சேவையும் இரண்டாவது மாடியில் விலைமாதர்களின் சேவையும் வழங்கப்படுகிறது.
அச்சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 80 முதல் 150 ரிங்கிட் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமாம்.
கைதான அனைவரும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கு உதவ வருமாறு 5 உள்ளூர் ஆடவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.