கோலாலம்பூர், டிச 18 – கோலாலம்பூரில் உள்ள அடுக்கக கட்டிடத்தில் பூனையின் கழுத்தை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற ஆடவருக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாண்டு நவம்பர் 21 ஆம்தேதியன்று பழைய கிள்ளான் சாலையில் உள்ள அடுக்ககத்தின் நடைபாதையில் அந்த வளர்ப்புக் பிராணிக்கு தேவையற்ற வலி அல்லது சித்ரவதையை ஏற்படுத்தியதாக 43 வயதுடைய கோ குவான் பான், ( Goh Kuan Pan ) என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
1953ஆம் ஆண்டின் பிராணிகள் சட்டத்தின் 44 (1) (d) விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை கோ ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அந்த நபருக்கு 10,000 ரிங்கிட் அபராதம் விதிப்பதாக நீதிபதி நோரினா ஜைனோல் அபிடின் (Norina Zainol Abidin ) தீர்ப்பளித்தார்.
மேலும், பூனையின் உரிமையைப் பெற கோ விண்ணப்பிக்கும் வரை அல்லது புதிய பராமரிப்பாளர் ஒப்புக்கொள்ளும் வரை அதனை கால்நடை சேவைத் துறையின் பராமரிப்பில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.