
காஜாங், ஜூன் , 26 – செராஸ், தாமான் புக்கிட் சேகாரில் தனது வீட்டின் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தபோது கீழே விழுந்ததாக நம்பப்படும் 9 வயது சிறுவன் உயிரிழந்தான்.
இரவு மணி 9.01 அளவில் இந்த சம்பவம் குறித்து Ca Canselor Tuanku Muhriz UKM மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிடமிருந்து தகவலை பெற்றதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் நஸ்ருன் அப்துல் யூசோப் ( Naazron Abdul Yusof ) தெரிவித்தார்.
நேற்று மாலை மணி 5 அளவில் கீழே விழுந்து காயம் அடைந்ததைத் தொடர்ந்து அச்சிறுவனை அவனது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
பிரேதப் பரிசோதனைக்காக அச்சிறுவனின் உடல் UKM மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டது.
அச்சிறுவனின் இறப்புக்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் நஸ்ருன் தெரிவித்தார்.
அவனது இறப்பு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதால் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31 ( 1) (a) விதியின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



