ஷா அலாம், ஏப் 24 – கோலா குபு பாரு இடைத்தேர்தலை முன்னிட்டு மொத்தம் 640 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என சிலாங்கூர் போலீஸ் துணைத் தலைவர் Datuk S. Sasikala Devi தெரிவித்தார். ஏப்ரல் 27ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் நாள் தொடங்கி மே 11ஆம்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறும்வரை பாதுகாப்பு, மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது உட்பட பலேவேறு பாதுகாப்பு பணிகளில் கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதியில் போலீஸ் அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் பணியில் ஈடுபாடுவர்கள் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
பிரச்சாரக் காலத்தில் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத அம்சங்கள் குறித்து விரைவில் அரசியல் கட்சியின் பிரதிநிதிகளை உலுசிலாங்கூர் OCPD சந்திப்பார் என சசிகலா கூறினார். தேர்தல் பிரச்சாரத்தின்போது 3 R எனப்படும் இனம், சமயம் மற்றும் அரச அமைப்பு தொடர்பான விவகாரங்களை அரசியல் கட்சிகள் சர்ச்சையாக்கக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டார். மே 7 ஆம் தேதி நடைபெறும் முன்கூட்டியே வாக்களிக்கும் நடவடிக்கையில் 625 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 238 ராணுவ அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.