Latestமலேசியா

கோலா குபு பாரு இடைத் தேர்தல்; 18 வாக்களிப்பு மையங்களில் காலை 8 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது

உலு சிலாங்கூர், மே 11 – சிலாங்கூரின் கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8 மணியளவில் 18 வாக்களிப்பு மையங்களில் உள்ள 74 வாக்கு சாவடிகளில் தொடங்கியது. மொத்தம் 40,226 பதிவு பெற்ற வாக்காளர்களை கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதி கொண்டுள்ளது. ஏற்கனவே 625 போலீஸ்காரர்கள் , 238 ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியார்கள் முன்கூட்டியே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்களிப்பில் தங்களது வாக்குகளை செலுத்திவிட்டனர்.

இன்று மாலை மணி 6 வரை வாக்குச் சாவடிகள் திறந்திருக்கும் என்பதால் எஞ்சிய 39,362 பதிவு பெற்ற வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த வாக்காளர்களில் 49.3 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் மற்றும் 30. 6 விழுக்காட்டினர் சீன வாக்காளர்களாவர். இந்திய வாக்காளர்களில் 18 விழுக்காட்டினர் இருந்தாலும் இந்த இடைத் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய துருப்புச் சீட்டாக அவர்கள் உள்ளனர்.

காலை வானிலை நன்றாக இருக்கும் என மலேசி வானிலை துறை அறிவித்திருப்பதால் பெரும்பாலான வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வத்தோடு வாக்களிக்க வந்ததை பல வாக்களிப்பு மையங்களில் காணமுடிகிறது.

மக்கள் கூட்டணியின் வேட்பாளராக DAP யின்
Pang Sock Tao, Perikatan Nasional கூட்டணியின் சார்பில் Khairul Azhari Saut, Parti Rakyat Malaysia வின் சார்பில் Hadizah Zainuddin மற்றும் சுயேச்சையான
Nyau ke xin என இந்த இடைத் தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களும் கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளராக பதிவு செய்யவில்லை என்பதால் அவர்களில் எவரும் வாக்களிக்கும் தகுதியை கொண்டிருக்கவில்லை. கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த Lee Kee Hiong கடந்த மார்ச் 21 ஆம்தேதி புற்றுநோய் காரணமாக காலமானதால் அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற சிலாங்கூர் சட்டமன்ற தேர்தலின்போது Lee Kee Hion 4.119 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!