கோலா சிலாங்கூர், ஆகஸ்ட் 5 – நேற்று கோலா சிலாங்கூரில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், மொத்தம் 676 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டினரின் வருகை குறித்து குடியிருப்பாளர்களிடமிருந்து கிடைக்கபெற்ற புகார்களை தொடர்ந்து எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில், வங்காளதேசத்தையும் மியான்மாரையும் சேர்ந்த 665 ஆண்களும் 11 பெண்களும் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.
இவர்களில் அதிகமானோர் கட்டுமானத் துறையில், மளிகைக் கடையில், தொழிற்சாலை தொழிலாளர்களாகவும், சிறிய அளவிலான சட்டவிரோத விற்பனையாளர்களாகவும் வேலை செய்கிறார்கள் என மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டன் முகமட் அம்பியா நோர்டின் (Mohd Ambia Nordin) தெரிவித்தார்.
கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைமையகத்திலிருந்து 277 தனிப்படையினர் மேற்கொண்ட அச்சோதனையில் பிடிப்பட்டவர்கள் தற்போது, ஆவணங்கள் செயலாக்கத்திற்காக மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.