கோலா திரங்கானு, மே 6 – திரங்கானுவில், வாழை குலை ஒன்றை திருடிய ஆடவன் ஒருவனுக்கு, 30 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து, கோலா திரங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
44 வயது வான் முஸ்தபா அப்துல் ரஹ்மான் எனும் அவ்வாடவன் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து அவனுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னதாக, முதியவர் ஒருவருக்கு சொந்தமான வாழை குலையைத் திருடியதாக அவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்தான்.
ஏப்ரல் 29-ஆம் தேதி, மாலை மணி 6.50 வாக்கில், கோலா திரங்கானு, கம்போங் பெலாடாவ் கோலம் மனிர் எனுமிடத்தில் அவன் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.
அவ்வாடவன் கைதான ஏப்ரல் 29-ஆம் தேதியிலிருந்து, அவனது சிறைத் தண்டனை அமலுக்கு வருவதாக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.