கங்கார், மே 30 – பெர்லீஸ், கோலா பெர்லீஸ், கம்போங் வாயிலுள்ள, சதுப்பு நிலக் காட்டிலிருந்து, சிதைந்த மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனித எலும்புக்கூடு, நேற்று மாலை மணி 4.20 வாக்கில், அவ்வழியே பயணித்த பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மேற்கொண்ட சோதனையில், அவ்விடத்தில் சந்தேகிக்கும் வகையில் குற்றவியல் அம்சங்கள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை.
அதோடு, எலும்புக்கூடு சிதைந்து போயிருந்ததால், சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்தததற்கான காரணமும் தெரியவில்லை என கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் யுஷரிபுடின் முஹமட் யூசோப் தெரிவித்தார்.
அந்த எலும்புக்கூடு வேறு இடத்திலிருந்து அடித்து வரப்பட்டிருக்கலாம் அல்லது, கொடிய விலங்குகளால் அது உண்ணப்பட்டிருக்கலாம் எனும் சாத்தியத்தையும் அவர் மறுக்கவில்லை.
அதனால், அந்த எலும்புக்கூடு மேல் பரிசோதனைக்காக துவான்கு பெளசியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை ; அதனை ஒரு திடீர் மரணமாக போலீட் வகைப்படுத்தியுள்ளது.