
கோலாலம்பூர், நவ 14 – கிளந்தானில் ஒரு குரங்கை துன்புறுத்தும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அந்த வீடியோவில் காணப்படும் ஆடவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு விலங்கு உரிமைகள் குழு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கிலியால் பிணைக்கப்பட்டு, பல முறை அறையப்பட்டு மற்றும் தாக்கப்பட்டதால் அந்த குரங்கு வலியால் வேதனைப்படுவதை வீடியோ காட்சிகள் மூலம் தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான பெர்ஹிலித்தானை ( SAFM ) எனப்படும் மலேசியா விலங்கு அறநிறுவனம் கேட்டுக்கொண்டது.
இச்சம்பவம் தொடர்பில் சாட்சிகள் அல்லது தகவல் அறிந்த எவரும் விசாரணைக்கு உதவ முன்வரும்படி அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியது.
விலங்கு துஷ்பிரயோகம் செய்வது 2010 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றம் என்பதை பொதுமக்களுக்கு மலேசிய பிராணிகள் அறநிறுவனம் நினைவுறுத்தியுள்ளது.
குற்றவாளிகளுக்கு 100,000 ரிங்கிட்வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து நீதியை நிலைநாட்ட அதிகாரிகள் உறுதியான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் SAFM அறைகூவல் விடுத்துள்ளது.



