ஜோர்ஜ் டவுன், ஜூன் 27 – சட்டவிரோதமான சந்திரா கும்பலில் உறுப்பினராக இருந்ததாக நிலக்கரி தொழில்துறையைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மீது ஜோர்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 49 வயதுடைய ஜெகேந்திரன் ( Jagandran) தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை அவர் சந்திரா கும்பலில் உறுப்பினராக இருந்ததாக மாஜிஸ்திரேட் நடராத்துன் நய்ம் முகமட் சைடி ( Nadratun Naim Mohd. Saidi ) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
1966ஆம் ஆண்டின் இயக்கத்தின் சட்டத்தின் 43 ஆவது விதியின் கீழ் அவர் இந்த குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுக்கு மேற்போகாத சிறை அல்லது 5,000 ரிங்கிட்டிற்கும் மேபோகாத அபரதம் அல்லது அவையிரண்டும் விதிக்கப்படலாம். ஜெகேந்திரனுக்கு 4,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டு ஆகஸ்டு 5ஆம்தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.