பத்து பஹாட், ஆகஸ்ட் 29 – நண்பனின் காதலிக்காகச் சண்டையில் ஈடுபட்ட ஏழு நேப்பாளிகளுக்கு இன்று, மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தலா 1,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
ஹிந்தியில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டின்படி, கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி இரவு 9:30 மணியளவில், தாமான் ஸ்ரீ சாகா (Taman Sri Saga), ஜாலான் செரியா (Jalan Ceria) 5-யில் உள்ள விநியோக நிறுவனத்தின் முன், இவர்கள் சண்டையிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் காதலியை வேறு ஓர் ஆடவன் சீண்டியதில் இந்த சண்டை மூண்டுள்ளது.
இதன் விளைவாக, குற்றம் சாட்டப்பட்டவர் காதலியை சீண்டிய ஆடவரைத் தாக்க மற்றவர்களையும் அழைத்து, கட்டைகளைப் பயன்படுத்தி அடித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 160-யின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.