
\
சபா செப்டம்பர்- 26,
நேற்று சபா துவாரன் பகுதியில், பல நாட்கள் தேடி வந்த குற்றவாளியைக் கைது செய்யும் தருவாயில் அந்நபர் திடீரென தப்பியோட முயன்றதால், துப்பாக்கியை எடுத்து எச்சரித்து அந்த ஆடவனை போலீசார் வெற்றிகரமாக கைது செய்தனர்.,
மாநில குற்றப்பிரிவு அதிகாரிகள், துவாரனில் உள்ள CKS பிளாசா வணிக வளாகத்தில் அந்த சந்தேக நபர் இருந்த வாகனத்தை முதலில் கண்டுபிடித்தனர்.
அதிகாரிகள் தங்களை போலீஸார் என அறிமுகப்படுத்தியவுடன், குற்றவாளி தன்னுடைய வாகனத்தை பின்புறம் இயக்கி, போலீஸ் வாகனத்தை பலமுறை மோதினான்.
இந்நிலையில், போலீசார் முன்பக்க வாகன கண்ணாடியை உடைத்து பல சவால்களுக்கு மத்தியில் அவனை கைது செய்தனர் என்றும் துப்பாக்கிச் சூடு எதுவும் ஏற்படவில்லை என்றும் அறியப்படுகின்றது.
இந்த சம்பவத்தின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.