கோத்தா கினபாலு, ஏப் 5 – கோத்தா கினபாலுவில் Manggatal லுக்கு அருகே Sabah Electricity Sdn Bhd ட்டின் பிரதான கிடங்கில் நேற்று ஏற்பட்ட தீவித்தில் 40 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மின்னியல் கேபல் சுருள்கள் அழிந்தன. அண்மையில் அந்த கிடங்கில் வைக்கப்பட்டிருந்த reel Cableகள் அழிந்ததாக SESB நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ Wilfred Madius Tangau தெரிவித்தார். 1.2 ஹெக்டர் பகுதியில் கொள்கலனில் வைக்கப்பட்டிருந்த அந்த கேபள் சுருள்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள பயனீட்டாளர்களின் வீடுகளில் பொருத்தப்பட வேண்டியிருந்தாக அவர் தெரிவித்தார்.
இத்தீவிபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என Wilfred கூறினார். கோத்தா கினபாலு, Jalan Lintas, Penampang ஆகிய இடங்களைச் சேர்ந்த தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 60 தீயணைப்பு வீரர்கள் இந்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு நீர்க்குழாயில் போதுமான நீர் அழுத்தம் இல்லாத காரணத்தினால் அருகேயுள்ள கால்வாயிலிருந்து நீர் எடுக்கப்பட்டதாகவும் அதுவும் 40 நிமிடங்களில் தீர்ந்துவிட்டதால் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 1.2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Sungai Manggatal ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்பட்டதாக தீயணைப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.