அலோஸ்டார், ஏப் 24 – சமூக வலைத்தளங்கள் மூலமாக வாகன உரிமம் அல்லது லைசென்ஸ்சை வெளிநாட்டினர் வாங்கியிருப்பதை சாலை போக்குவரத்துத்துறை கண்டறிந்துள்ளதாக கெடா சாலை போக்குவரத்துத்துறை துணை இயக்குநர் Shahrul Azhar Mat Dali தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் 9ஆம் தேதி வியாட்னாம் ஆடவர் ஒருவரை கைது செய்ததாகவும் அந்த ஆடவர் சமூக வலைத்தளத்தில் 2,000 ரிங்கிட்டிற்கு பதிவு பெற்ற வாகன ஓட்டும் லைசென்ஸை வாங்கியிருப்பதாக Sharul கூறினார். Buku Kayu Hitam மிலிருந்து ரயில் வழியாக நாட்டிற்கு நுழைந்த அந்த ஆடவர் காலை மணி 7.57 அளவில் Bukit Kayu Hitam மில் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் வாகன லைசென்ஸ் இருந்தது குறித்த நாங்கள் சந்தேகித்தோம், அந்த லைசென்ஸ்சை பறிமுதல் செய்து அதனை ரசாயனத்துறைக்கு அனுப்பிவைத்தபோது அது போலீயென தெரியவந்தது. முதல் முறையாக
இப்படியொரு சம்பவம் தெரியவந்துள்ளதால் இது குறித்து சாலை போக்குவரத்துத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக Sharul தெரிவித்தார். பொதுமக்கள் மட்டுமே சமூக வலைத்தளங்கள் மூலமாக லைசென்ஸ் வாங்கும் வசதி இருப்பதாகவும் வெளிநாட்டினருக்கு இந்த வாய்ப்பு கிடையாது என Sharul கூறினார்.