
கோலாலாலாம்பூர், மார்ச்-16-சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீதான விசாரணை இன்னும் முடிவடையவில்லை.
எனவே தான் அவர் இன்னும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவில்லை என போலீஸ் தெளிவுப்படுத்தியுள்ளது.
சம்ரி இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என இன்று காலையிலிருந்தே வதந்திகள் பரவிய நிலையில், அதனை மறுக்கும் விதமாக PDRM அவ்வாறு கூறியது.
இவ்வேளையில், தனது கட்சிக்காரர் எப்போது நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை என, சம்ரியின் வழக்கறிஞரும் கூறியுள்ளார்.
இந்தியச் சமூகத்தை அவமதித்ததாகவும், வன்முறையை தூண்டியதன் பேரிலும் சம்ரி வினோத் குற்றம் சாட்டப்படலாம் எனவும், ஆனால் அவரும், சர்ச்சைக்குரிய மற்றொரு சமூக ஆர்வலரான தமிம் டாஹ்ரியும் தாய்லாந்துக்கு தப்பியோடி விட்டதாகவும் போலீஸ் முன்னதாகக் கூறியிருந்தது.
ஆனால், சம்ரியோ, _‘நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, போலீஸுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன்’ என ஃபேஸ்புக்கில் கூறியிருந்தார்.



