கோலாலம்பூர், ஏப் 18- சருகுமான் உடல் பாகங்களை வைத்திருந்தாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை FRU கலகத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த எட்டு போலீஸ்காரர்கள் மறுத்தனர். சருகுமானின் உடலின் 8 பாகங்களை அவர்கள் வைத்திருந்ததாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Mazni Nawi முன்னிலையில் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது . 2010 ஆம் ஆண்டின் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சட்டத்தின் கீழ் அந்த எண்மரும் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம்தேதி நண்பகல் ஒரு மணியளவில் கோலாப் பிலா, கம்போங் Talang Empangan னில் ஜீப் ஒன்றின் பின்னால் இருந்த தோம்பில் மான் உடல் பாகங்களை வைத்திருந்தாக குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50,000 ரிங்கிம் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அவையிரண்டும் விதிக்கப்படலாம். அவர்கள் அனைவருக்கும் 2,000 ஜாமின் அனுமதிக்கப்பட்டது.
Check Also
Close