பத்து பஹாட் , ஏப் 23 – சாடின்கள் , வாய் கொப்பளிக்கும் திரவம் மற்றும் Nescafe ஆகியவற்றை ஒரு கடையில் திருடியதை ஒப்புக்கொண்ட 64 வயது ஆடவர் ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு மாதம் சிறைத்தண்டனை விதித்தது. மாஜிஸ்திரேட் Suhaila Shafi’uddin முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து Jamaluddin Yusof என்ற அந்த ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஒரு பாதுகாவலரான அவர் 10 சார்டின்கள், வாய் கொப்பளிக்கும் நான்கு திரவ போத்தல்கள் மற்றும் இரண்டு போத்தல்கள் Nescafe யை Parit Raja விலுள்ள ஒரு கடையில் வியாழக்கிழமையன்று பிற்பகல் மணி 1.15 அளவில் திருடியதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
10 ஆண்டுகள்வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 380ஆவது விதியின் கீழ் Jamaluddin மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. கடை ஊழியர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவரிடம் திருட்டுப் பொருட்கள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து Jamaluddin னுக்கான ஒரு மாத தண்டனை அமலுக்கு வருவதாக மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.