பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 21 – 12 ஆண்டுகளாகச் சமூக கடப்பாட்டுடன் செயல்பட்டு வரும் சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியச் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘சாயியுடன் ஆரோக்கியப் பயணம்’ எனும் நிகழ்ச்சி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே, குறிப்பாக B40 பிரிவினரிடையே குறைந்து வரும் உடல் நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வை மேம்படுத்தும் உன்னத நோக்கில் இந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கருத்தரங்கு பாணியில் இல்லாமல், விளையாட்டுகள், உடற்பயிற்சி சவால்கள், கண்கவர் பரிசுகள், இரவு உணவுடன் டாமன்சாரா டாமாய்யில் MRT அருகே ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளதாக, அச்சங்கத்தின் கல்வி பிரிவு ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
6 வயது முதல் 60 வயதிலான பொதுமக்கள் திரையில் காணும் எண்களை அழைத்து, தங்களது வருகையைப் பதிவு செய்து இலவசமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.