கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – சாய் யூத் கால்பந்து அகாடமி ஏற்பாட்டில் பெண்கள் காற்பந்து பயிற்சி பட்டறை ஒன்று எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இளம் பெண்களும் காற்பந்து துறையில் கால்பதிக்க வேண்டும் எனும் நோக்கில், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை கிள்ளானில் உள்ள புக்கிட் ராஜா தமிழ்ப்பள்ளியின் திடலில் இந்த பயிற்சி நடைபெறவிருக்கிறது.
5 வயது முதல் 12 வயது வரையிலான மாணவிகள் இந்த காற்பந்து கற்றுக்கொள்ளும் பயிற்சியில் கலந்துகொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.
உணவு, நற்சான்றிதழ், உடை என அனைத்தும் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த பெண்களுக்கான காற்பந்து பயிற்சி பட்டறையை, மலேசியா காற்பந்து சங்கத்தின் நிபுணத்துவம் வாய்ந்த பயிற்றுநர்களான சாய் கீர்த்தனா, துர்காஷினி, சரணியா, சர்வினி, திவாஷினி ஆகியோர் வழிநடத்துவர்.
இந்த பயிற்சி நிறைவு விழாவில் மலேசிய காற்பந்து சங்கத்தின் பிரதிநிதிகளும், மிஃபா காற்பந்து சங்கத்தின் தலைவரும் கலந்து கொள்வார்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைவரான சாய் கீர்த்தனா குறிப்பிட்டார்.
இப்பயிற்க்குப் பதிவு செய்யும் இறுதி நாள் ஆகஸ்ட் 20ஆம் திகதி.
இதில் கலந்து கொள்பவர்களுக்கு 20 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் பதிவு செய்ய அழைக்கப்படுகிறார்கள்.