
ஷா ஆலாம், ஜூலை.08- கடந்த மாதம் கூட்டரசு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரை இறைச்சி வெட்டும் கத்தியால் தாக்கிய ஆடவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது. 43 வயதான அந்த filter விற்பனையாளர் தம் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து ஷா ஆலாம் sessions நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
கடந்த ஜூன் 11 ஆம் தேதி காலை, கூட்டரசு நெடுஞ்சாலையின் section 13க்கு அருகே மோட்டார் சைக்கிள் பாதையில் அத்தாக்குதல் நிகழ்ந்தது. Azmi Jantan எனும் அந்நபர், சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டியை இறைச்சி வெட்டும் கத்தியால் தாக்கி மோசமான காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தண்டனைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
தாக்குதலுக்கு ஆளான நபர் தம்மைப் பார்த்து ஹார்ன் அடித்ததால் AZAM அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு தோள்பட்டை, கை, விரல்கள், இடது மணிக்கட்டில் எலும்பு முறிவுகள், தலை மற்றும் முகத்தில் வெட்டுக்காயங்கள் உட்பட பலத்த காயங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



