Latestஉலகம்

இந்தியாவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை ஊசி மூலம் செலுத்தி கணவரைக் கொன்ற தாதி

ஹைதராபாத், ஜூலை.08 – இந்தியா, தெலங்கானாவில் தாதி ஒருவர் தனது கணவரை கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கொண்ட ஊசியைச் செலுத்தி கொலை செய்திருக்கிறார். 32 வயதான அப்பெண் தூக்க மருத்தையும் அதில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமது கள்ளக் காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதாகக் கருதி அவர் அப்பாதகச் செயலைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.

சந்தியா எனும் அப்பெண் ஏற்கனவே தமது கணவரைக் கொலை செய்ய முயன்றுள்ளார். எனினும் அது தோல்வியில் முடிந்துள்ளது. எனவே தமது கள்ளக் காதலர் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி சந்தியா கணவரை அவ்வகையில் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

பிரசாந்த் எனும் சந்தியாவின் கணவரின் தாயார் அளித்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மொத்த விஷயமும் அம்பலமானது. உயிரிழந்த பிரசாந்த் கடந்த இரண்டு ஆண்டுகளாக வளைகுடாப் பகுதியில் பணி புரிந்து வந்துள்ளார். அண்மையில் இந்தியா திரும்பிய அவர் மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டாம் என முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!