சிங்கப்பூர், மே 16 – சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக லாரன்ஸ் வோங் நேற்றிரவு பதவியேற்றார்.
51 வயது வோங், கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த 72 வயதான லீ சியென் லூங்கிற்குப் பதிலாக பிரதமர் பதவியை ஏற்றுள்ளார்.
பிரதமர் வோங்கின், பதவியேற்று சடங்கி நேரலையாக உள்நாட்டு தொலைகாட்சிகளில் ஒளிபரப்பட்டது.
“மாஜுலா சிங்கபூரா” பாடலுடன் தொடங்கி, சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தின் உரையைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் முன்னிலையில், வோங் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
நிதியமைச்சர் பொறுப்பையும் தக்க வைத்துக் கொண்ட வோங் பின்னர் தனது பதவி உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான கான் கிம் யோங் துணைப் பிரதமராகவும் நியமிக்கப்பட்டுள்ள வேளை அவருடன் இணைந்து 14 அமைச்சர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இவ்வேளையில், மற்றொரு மாநில அமைச்சராக முரளி பிள்ளை நியமிக்கப்பட்டு, ஜூலை முதலாம் தேதி அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றோடு, தனது அரசாங்கத்துடன் பதவி விலக விரும்புவதாக லீ சியென் லூங் இதற்கு முன் அறிவித்திருந்ததை தொடந்து, இம்மாதம் 13-ஆம் தேதி வோங் தனது அமைச்சரவை பட்டியலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.