சிங்கப்பூரில் ரொட்டி அலமாரியை துடைப்பத்தால் சுத்தம் செய்த ஊழியர் வேலை நீக்கம்

சிங்கப்பூரில் ரொட்டி அலமாரியை துடைப்பத்தால் சுத்தம் செய்த ஊழியர் வேலை நீக்கம்
சிங்கப்பூர், பிப்ரவரி 11 –
சிங்கப்பூரின் ஈஸ்ட்பாயிண்ட் மாலில் உள்ள (Eastpoint Mall,) பிரெட் டாக் பேக்கரி என்ற ரொட்டி நிறுவனத்தில் அலமாரிகளை துடைப்பத்தை பயன்படுத்தி துப்புரவு ஊழியர் ஒருவர் சுத்தம் செய்யும் சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அந்த ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பிப்ரவரி 9 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ரொட்டி நிறுவனம் அறிந்ததோடு இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளவதாக உறுதியளித்தது.
சம்பந்தப்பட்ட அந்த ஊழியரின் செயல் மன்னிக்க முடியாத மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதால் அந்த ரொட்டி நிறுவனம் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டது. அதோடு அந்த ஊழியரின் செயல் அதன் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு முரணானது என்றும் அந்நிறுவனம் வலியுறுத்தியது.



