Latestஉலகம்

சிங்கப்பூர் ஏர் விமான நிறுவன ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் போனசாக வழங்கப்படும்

சிங்கப்பூர், மே 17 – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் (Singapore Airlines Ltd) நிறுவனம்  தனது ஊழியர்களுக்கு  8 மாத சம்பளத்தை bonusசாக  வழங்கவிருக்கிறது. அந்த நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக  உயரிய போனசை  வழங்க  முன்வந்துள்ளது.  Singapore Airlinesஸின் முந்தைய ஆண்டு வருமானத்தைவிட அது  செலுத்தும்  தொகை அதிகமாக உள்ளது.  இதன் விளைவாக 6.65 மாத ஊதியத்திற்கு சமமான லாபபகிர்வு bonus மற்றும் கோவிட் தொற்றுநோய் தொடர்பான சலுகை bonus அதிகபட்சமாக 1.5 மாத சம்பளமாக உள்ளது. இது குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கருத்துரைக்க  மறுத்துவிட்டது.

2023-2024 நிதியாண்டில் சிங்கப்பூர் அரசாங்கத்தின்   விமான நிறுவனம் ஒரு சாதனையாக   2.67 பில்லியன்  சிங்கப்பூர் டாலர் ஆண்டு லாபத்தை வழங்கியது. இது முந்தைய ஆண்டை விட 24விழுக்காடு அதிகமாகும்   என  ஒரு பரிமாற்றத் தாக்கலில் தெரிவித்துள்ளது.  அதிக செலவுகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை  ஈடுகட்ட ஒரு மிதமான துறை வேலை செய்வதால், விமானங்களுக்கான குறுகிய கால தேவை ஆரோக்கியமாக இருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.  கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, மற்ற விமான நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில்    சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வேகமாக மீண்டும் திறக்கப்பட்டு, துரித வளர்ச்சியினால்  கூடுதலான   நன்மையை அடைந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!