Latestஉலகம்

சிட்னி பேரங்காடியில் மர்ம ஆடவன் நடத்தியைக் கத்திக்குத்து தாக்குதல்; அறுவர் பலி

சிட்னி, ஏப்ரல்-14 – ஆஸ்திரேலியா சிட்னியில் எட்டாண்டுகளில் நிகழ்ந்த மோசமான சம்பவமாக, பரபரப்புமிக்க பேரங்காடியில் மர்ம ஆடவன் மேற்கொண்ட கத்திக்குத்துத் தாக்குதலில் குறைந்தது அறுவர் கொல்லப்பட்டனர்.

Westfield Bondi Junction எனும் பரபரப்பான கடைத்தொகுதியில் சனிக்கிழமை மதியம் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த சமயம் அவன் அத்தாக்குதலை மேற்கொண்டான்.

9 மாதக் குழந்தை, அதன் தாய் உள்ளிட்ட 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் சிலரது நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்தாக்குதல் சம்பவத்தால் பாதுகாப்புக் கருதி நூற்றுக்கணக்கானோர் பேரங்காடியில் இருந்து வெளியேற்றப்பட்டு, அப்பகுதியைப் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

கொலையாளி கத்தியை வைத்துக்கொண்டு, அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டித் தாக்கியுள்ளான்; இதனால் பலர் அலறியடித்து ஓட்டம் பிடித்த வேளை, சிலர் கடைகளுக்குள் கதவைப் பூட்டிக் கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

பெரியக் கத்தியுடன் குத்துவதற்கு ஆட்களைத் தேடி பேரங்காடியினுள் அவன் ஓடுவது வைரலாகியுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவில் தெரிகிறது.

கொலையாளி பின்னர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ரோந்து போலீஸ் வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

தாக்குதலுக்கானக் காரணம் குறித்து தகவலேதும் இல்லை.

இவ்வேளையில் அத்தாக்குதல் வார்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று எனக் குறிப்பிட்ட ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese, தாக்குதலுக்கானக் காரணம் குறித்து யூகங்களை எழுப்புவது இப்போது சரியாக இருக்காது என்றார்.

போலீசார் விசாரிக்க வழி விடுவோம் என அவர் சொன்னார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!