குவா மூசாங் , மே 15 – Jalan Gua Musang – Lojing சாலையின் 80 ஆவது கிலோமீட்டரில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற லோரி பள்ளத்தில் விழுந்ததில் அதில் பயணம் செய்த மூவர் மாண்டனர். இன்று காலை மணி 10.40 அளவில் நிகழ்ந்த அந்த துயர சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க மூன்று பூர்வ குடிகள் இறந்ததாக Gua Musang தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் மூத்த அதிகாரி Nor Azizi Che Noh தெரிவித்தார்.
இந்த விபத்து நிகழ்ந்த பள்ளம் 150 மீட்டர் ஆழமாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் மதியம் 12 மணியளவில்தான் அங்கு சென்றடைந்தனர். கயிற்றை பயன்படுத்தி பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் இறந்த மூவரின் உடல்களையும் பிற்பகல் மணி 2.22 அளவில் மேலே கொண்டு வந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அம்மூவரும் இறந்ததாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.