சிரம்பான், ஆகஸ்ட்-21 – சிரம்பான், ஜாலான் தோக் உங்கு (Jalan Tok Ungku) அருகே உணவகமொன்றில் வலிப்பு வந்து விழும் அளவுக்கு ஆடவரைத் தாக்கிய, 2 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிறன்று இரவு 11 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவம் வைரலான நிலையில், அதன் வீடியோ உதவியுடன் இருவரைக் கைதுச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் மொஹமட் ஹத்தா ச்சே டின் (Mohamad Hatta Che Din) அதனைத் தெரிவித்தார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீஸ் விசாரணைக்கு உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அறிமுகமான இரு ஆடவர்களால் தான் தாக்கப்பட்டதாகக் கூறி, நேற்று முந்தினம் அவ்வாடவர் போலீசிஸ் புகார் செய்தார்.
கைகளாலும், நாற்காலியைக் கொண்டும் உடம்பிலும் தலையில் அவர் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தனிப்பட்ட விஷயங்களால் வாக்குவாதம் முற்றி அச்சம்பவம் சண்டையில் முடிந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.