Latestமலேசியா

சிரம்பான் ஸ்ரீ மகா ராஜராஜேஸ்வரர் ஆலய திருவிழாவில் டத்தோ சிவகுமார் சிறப்பு வருகை

சிரம்பான், ஜூலை 7 – நேற்று, மஹிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் நடராஜா, சிரம்பானில் அமைந்துள்ள ஸ்ரீ மகா ராஜராஜேஸ்வரர் ஆலய வருடாந்திர திருவிழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளார்.

ஆலய தலைவர் திரு. விஜயனின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க கோயில் பிரார்த்தனைகளில் பங்கேற்று, பக்தர்கள் மற்றும் கோயில் குழு உறுப்பினர்களுடன் இணைந்து தேர் ஊர்வலத்திலும் பங்கேற்றுள்ளார்.

 

சமய நெறிகள் மற்றும் புனித மரபுகளைத் தொடர்ந்து பேணி வரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் ஆலயத்திற்கு தமது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும் ​​இந்து ஆலயங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேலோங்க செய்யும் வண்ணம் டத்தோ சிவகுமார் மஹிமா உறுப்பினர் சான்றிதழை ஸ்ரீ மகா ராஜராஜேஸ்வரர் ஆலயத்திற்கு வழங்கி, மஹிமா வலையமைப்பில் ஆலயத்தை அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளார்.

மக்களிடையே ஆன்மீகத்தை வளர்ப்பதற்கு கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் இதுபோன்ற அர்த்தமுள்ள ஆலய கொண்டாட்டங்களில் அதிகமான பக்தர்கள் பங்கேற்க வேண்டுமென்றும் டத்தோ சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!