கோலாலம்பூர், மே 29 – தைப்பிங்கில் பணியில் இருந்த போலீஸ் கார்பரல் ஒருவர், சிறுநீர் கழிக்கச் சென்ற போது, தனது துப்பாக்கியை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரின் பூட்டில் வைத்துவிட்டு சென்ற துப்பாக்கி, சிறுநீர் கழிக்கச் சென்ற வேளையில் காணாமல் போனதை, அந்த போலீசார் தைப்பிங் தலைமை காவல்நிலையத்திற்கு சென்றடைந்த போதுதான் உணர்ந்துள்ளார்.
தைப்பிங் சங்காட் ஜெரிங்கில் கடந்த மே 27ஆம் திகதி மற்றோரு போலீசுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்திருந்த நிலையில், மாலை 2:35 மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக சாலையோரத்தில் அந்த போலீசார் காரை நிறுத்தியுள்ளார்.
அதன் பின்னர், தைப்பிங் காவல்நிலையத்திற்கு சென்ற அவர், மாலை 3:05 மணியளவில் துப்பாக்கியைத் தேட, அது காணாமல் போனதை அவர் கண்டறிந்துள்ளார்.
இதனிடையே, தைப்பிங் காவல்துறைத் தலைவர், காணாமல் போன துப்பாக்கியைக் கண்டுபிடிக்குமாறு அனைத்துப் பணியாளர்களுக்கும் உத்தரவிட்டிருக்கின்றார்.