Latestமலேசியா

சிறுவன் ஷைன் ராயன் கொலையில் பெற்றோர் கைதானது புதிய திருப்பமாகும்

கோலாலம்பூர், ஜூன் 2- ஆட்டிசத்திற்கு உள்ளான 6 வயது சிறுவன்
Zayn Rayyan Abdul Matiin கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆறு மாத காலமாக நடைபெற்ற விசாரணை மற்றும் வேவு தகவல்கள் மூலம் அச்சிறுவனின் பெற்றோர் கைது செய்யப்பட்டது ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. Zayn Rayyan மரணம் ஒரு கொலை என்பதற்கான ஆதாரங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனை மூலம் உறுதியானைதை தொடர்ந்து அந்த சிறுவனின் குடும்பத்தினரிமிருந்து ஏதாவது ஒரு தடயத்தை கண்டறிவதுதான் போலீசின் இலக்காக இருந்தது.

அதோடு கொலை நடந்த தினத்தன்று சிறுவன் Zayn Rayyan னை அவன் பயின்ற பாலர் பள்ளியிலிருந்து அவனது தாயார்தான் அழைத்து வந்துள்ளார் என்பது உறுதியானதை தொடர்ந்து விசாரணை அவனது குடும்பத்தினர் மீது கவனம் செலுத்தப்படுகிறது. விசாரணைக்கு உதவும் பொருட்டு ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் Zayn பெற்றோரிடம் அச்சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கான நோக்கத்தை அறிந்துகொள்ளும் வகையில் எங்களது விசாரணை இருக்கும் என சிலாங்கூர் போலீஸ தலைவர் டத்தோ Hussein omar Khan தெரிவித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!