Latestமலேசியா

சிலாங்கூரில் முதன்முறையாக மாநில அளவில் உகாதி கொண்டாட்டம்

கோத்தா கெமுனிங், மார்ச்-20-சிலாங்கூர் மாநில அளவில் முதன்முறையாக, தெலுங்கு புத்தாண்டான உகாதி விழா, சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஷா ஆலாம், கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நேற்றிரவு நடைபெற்ற இவ்விழாவில் சுமார் 100 முதல் 120 பேர் கலந்து கொண்டனர்.

விழா பாரம்பரிய பூஜையுடன் தொடங்கியது.

பின்னர், தெலுங்கு சங்க மாணவர்கள் பக்தி பாடல்களைப் பாடினர்.

அதன்பின் தெலுங்கு மொழி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘மா தெலுங்கு தல்லி’ பாடல் இசைக்கப்பட்டது.

முக்கிய விருந்தினர்களாக பாப்பாராயுடு, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் மற்றும் மலேசியத் தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் ஸ்ரீ சத்தியா சுதாகரன் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் சால்வை போர்த்தி பழக்கூடை வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

பின்னர், சிரத்தாலு மற்றும் தாத்துபஜன போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

“நாம் அமைதியாக இருக்கமாட்டோம்; நமது உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம். சரியான வழியில் தொடர்ந்து போராடுவோம்”என பிரகாஸ் தமதுரையில் கூறினார்.

பாப்பாராயுடு பேசுகையில், கோவில் தொடர்பான பிரச்னைகளை எடுத்துரைத்தார்.

ஒரு கோயிலுக்கு பெரிய கோபுரத்தை கட்டுவதை விட, நிலத்தை வாங்குவதே முக்கியம் என்றார் அவர்…

இவ்வேளையில், அடுத்து ஓணம், வைசாக்கி, மற்றும் சித்திரைப் புத்தாண்டும் இதே போல் மாநில அளவில் நடைபெறும் என செய்தியாளர் சந்திப்பில் பாப்பாராயுடு கூறினார்.

பாப்பாராயுடு RM30,000, அஸ்ரி என்பவர் RM50,000, பிரகாஸ் RM5,000 என விழாவில் முக்கிய நிதியுதவிகளும் அறிவிக்கப்பட்டன.

இந்த நிதியுதவிகள் எதிர்கால தெலுங்கு சங்க நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும்.

இந்த உகாதி விழா குறித்து காஜாங் ஸ்ரீனிவாஸ்ராவ் ராமநாயுடு மற்றும் மலேசிய தெலுங்கு சங்கத்தின் ஷா ஆலாம் கிளையின் தலைவர் சோமு பந்திநாயுடு, வணக்கம் மலேசியாவிடம் பேசினர்

இந்த மாநில அளவிலான உகாதி விழா, பாரம்பரியத்தை மட்டுமல்லாது, தெலுங்கு சமூகத்தையும், சிலாங்கூரின் பல்வேறு சமூகங்களையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக அமைந்தது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!