Latestமலேசியா

சிலாங்கூரில், 24 மணி நேர கடைகளை குறித்து வைத்து கொள்ளையிட்டு வந்த கும்பலின் நடவடிக்கை முறியடிப்பு ; மூவர் கைது

கோலாலம்பூர், ஏப்ரல் 22 – சிலாங்கூர், ஹுலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக் மாவட்டங்களில் அமைந்துள்ள, 24 மணி நேர பல்நோக்கு கடைகளில் கொள்ளையடித்து வந்த அயோய் கொள்ளைக் கும்பலின் நடவடிக்கைகளை போலீஸ் முறியடித்துள்ளது.

அக்கும்பலைச் சேர்ந்த மூவர் கைதுச் செய்யப்பட்டதை அடுத்து, அது சாத்தியமானதாக ஹுலு சிலாங்கூர் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஹ்மாட் பைசல் தஹ்ரிம் தெரிவித்தார்.

அதிகாலை மணி மூன்று வாக்கில், குவாங்கிலுள்ள, வீடொன்றில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 23 வயதுக்கும் 32 வயதுக்கும் இடைப்பட்ட அம்மூவரும் கைதுச் செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து, ஹோண்டா ஆர்எஸ்எக்ஸ் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று, இரு “ஹெல்மெட்கள்’, கருப்பு சட்டை மற்றும் ஒரு ஜோடி காலணி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

அம்மூவரையும் கைதுச் செய்ததன் வாயிலாக, ஹுலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக் மாவட்டங்களில் இதற்கு முன் புகார் செய்யப்பட்ட ஒன்பது கொள்ளை சம்பவங்களுக்கு தீர்வுக் காணப்பட்டிருப்பட்டிருப்பதாகவும் அஹ்மாட் பைசால் சொன்னார்.

குற்றவியல் சட்டத்தின் கீழ், விசாரணைக்கு உதவும் பொருட்டு அம்மூவரும் வரும் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26-ஆம் தேதி வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!