கோலாலம்பூர், ஏப் 15 -சிலாங்கூர் Kuala Kubu Baru சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பளார் குறித்து இன்னமும் விவாவதம் நடைபெற்று வருவதாக DAP யின் துணைத் தலைவர் Gobind Singh Deo தெரிவித்திருக்கிறார். வேட்பாளர் பரிசீலனைக்காக அதிகமானோரின் பெயர்களை தமது கட்சி பெற்றுள்ளதாக சிலாங்கூர் DAP யின் தலைவருமான அவர் தெரிவித்திருக்கிறார். சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் நிலையில் வேட்பாளர் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. பக்காத்தான் ஹராப்பானின் ஐந்து உயர்மட்ட தலைவர்களைக் கொண்ட குழுவினர் வேட்பாளரை பரிசீலித்து முடிவு செய்வார்கள் என Gobind Singh தெரிவித்தார். வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.