ஒட்டாவா, மே 5 – சீக்கிய பிரிவினைவாத தலைவன் Hardeep Singh Nijjar படுகொலை தொடர்பில் மூவரை கைது செய்த கனடா போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டினர்.
அதோடு அந்த படுகொலையில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் கனடா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இது குறித்து Ottawaவிலுள்ள இந்திய தூதரகம் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.
Vancouverரிலுள்ள சீக்கிய ஆலயத்திற்கு வெளியே 45 வயதுடைய Hardeep Singh கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டான்.
அந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக சில மாதங்களுக்குப் பிறகு கனடா பிரதமர் Justin Trudeau குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் கனடாவுக்குமிடையே அரசதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டது.
Hardeep Singh படுகொலை தொடர்பில் 28 வயதுடைய Karanpreet Singh , 22 வயதுடைய KamalPreet singh, 22 வயதுடைய Karan Brar ஆகியோரை தேடி வந்ததாக இதற்கு முன் கனடா போலீசார் தெரிவித்திருந்தனர்.