பெய்ஜிங், ஏப்ரல் 4 – சீனாவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த மூவர், பலத்த காற்றால், ஜன்னல் வழியாக தூக்கி வீசப்பட்டதில் உயிரிழ்ந்த சம்பவம், வைரலாகியுள்ளது.
மார்ச் 31-ஆம் தேதி, ஜியாங்கி மாநிலத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அச்சம்பவத்தில் நால்வர் பலியான வேளை ; குறைந்தது பத்து பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்த மூவர், ஒரே வீட்டில் வசித்த வேளை ; மற்றொருவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரியவில்லை.
அச்சம்பவத்தில் உயிரிழந்த 60 வயது பெண், அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது மாடியிலுள்ள, வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தாக. அவரது கணவர் கூறியுள்ளார்.
பேரிரைச்சல் கேட்டு மனைவின் அறைக்கு சென்று பார்த்த அந்நபர், அங்கு மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மனைவின் கட்டிலுக்கு அருகில் இருந்த கண்ணாடியும், கூரைப்பகுதியும் பலத்த காற்றால் சேதமடைந்திருந்ததையும் அவர் பார்த்துள்ளார்.
எனினும், பின்னர் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலிருந்து, அப்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.