Latestஉலகம்

சீனாவில், அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட Mukbang பிரபலம் ; நேரலையின் போது மரணம்

பெய்ஜிங், ஜூலை 22 – சீனாவில், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால், முக்பாங் (Mukbang) வீடியோக்களுக்கு பிரபலமான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

24 வயது பான் ஜியோடிங் (Pan Xiaoting) எனும் அப்பெண், சமூக ஊடக தளத்தில், நேரடி ஸ்ட்ரீமிங் செய்யும் போது உயிரிழந்ததாக கூறப்படுகிறது..

ஜியோடிங்கின் (Xiaoting) வயிற்றில் உணவு முழுமையாக ஜீரணிக்காமல் இருந்தது, சவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

அதோடு, அதிகளவில்  உணவை உட்கொண்டதால், ஜியோடிங்கின் குடலில் மோசமான காயம் ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீடியோபகிர்வு தளமான யூடியூப்பில் அதிகம் காணப்படும் முக்பாங் (Mukbang) வீடியோகளைப் பார்த்த பின்னர், ஜியோடிங்கும் அதில் ஈடுபடத் தொடங்கினார்.

முக்பாங் என்பது, தென் கொரிய சொல் ஆகும். முக்பாங் வீடியோக்களை  வெளியிடும் ‘vloggers’, நேரலை ஸ்ட்ரீமில் பார்வையாளர்களுடன் பேசிக் கொண்டே அதிக அளவில் அல்லது சூடான அல்லது காரமான உணவை உட்கொள்வார்கள்.

உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்த ஜியோடிங், முக்பாங் வீடியோக்களை தயாரிக்க ஏதுவாக வேலையை விட்டதோடு, அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து,  மும்முரமாக வீடியோக்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

ஒவ்வொரு முறையும் அவர் பத்து கிலோகிராமுக்கும் அதிகமான உணவை உட்கொள்வது வழக்கமாகும்.

அதனால், உடல் எடை 300 கிலோகிராம் வரை அதிகரித்து, வயிற்றில் இரத்தப் போக்கு ஏற்பட்டும் கூட அவர் சாப்பிடுவதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!