Latestஉலகம்

சீனாவில் வட்ட வடிவில் வானில் தோன்றியப் புகை; என்னவாக இருக்குமென நெட்டிசன்கள் விவாதம்

பெய்ஜிங், ஜூன்-26, வட சீன நகரான யூலின் (Yulin) வான்பகுதியில் மோதிரம் போன்றதொரு புகை வட்டம் தோன்றியது இன்னும் மர்மமாகவே உள்ளது.

வானில் சிறிய வட்ட வடிவில் அந்த கரும்புகை சுற்றுவது கடந்த வாரம் வீடியோவிலும் கேமராவிலும் பதிவாகி வைரலானது.

அது ஒருவேளை மிதக்கும் துகள்களாக இருக்கக்கூடும் என்றாலும், எளிதில் மறையாமல் இருப்பது தான் மர்மத்தை அதிகரித்துள்ளது.

இது போன்ற சம்பவம் உலகின் பல பகுதிகளில் ஏற்கனவே நடந்த ஒன்று தான் என்றாலும், அது உருவாகியதற்கான காரணம் துல்லியமாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும் விஞ்ஞானிகள் இரு சாத்தியங்களை முன் வைக்கின்றனர்.

ஒன்று, அருகில் உள்ள தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட எரிப்பு நடவடிக்கைகளால் அல்லது காற்றழுத்த வேறுபாட்டால் அது இயற்கையாகவே உருவாகியிருக்கலாம்.

இன்னொன்று, வழக்கமாக இனவிருத்திக்காக அதிகளவில் ஒன்றுகூடும் நுண்ணிய பூச்சிகளாலும் அது ஏற்பட்டிருக்கலாம்.

வேறு சிலரோ, வானவேடிக்கை அல்லது தொழிற்சாலை புகை அதற்குக் காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.

அந்த மோதிர வடிவிலான கரும்புகை சீன நாட்டு நெட்டிசன்கள் மத்தியில் தொடர்ந்து விவாதப் பொருளாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!