Latestமலேசியா

சீன சுடுகாட்டில் ஒழுங்கீனச் செயல்; வைரல் வீடியோ குறித்து பினாங்கு போலீஸ் விசாரணை

ஜோர்ஜ்டவுன், மார்ச்-24-ஒரு நடுத்தர வயது காதல் ஜோடி என நம்பப்படும் ஆணும் பெண்ணும் பொதுவெளி என்றும் பாராமல் சீன சுடுகாட்டில் ஒழுங்கீனத்தில் ஈடுபட்ட சம்பவம் பினாங்கில் நடந்தது என நம்பப்படுகிறது.

இதையடுத்து வைரலான அந்த வீடியோ குறித்து மாநில போலீஸ் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டது மற்றும் பாலியல் தொல்லை ஆகிய கோணங்களில் விசாரணை நடைபெறும் என, பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அசிசீ இஸ்மாயில் கூறினார்.

ஆனால், இது அண்மையில் நடந்த சம்பவமா அல்லது பழைய வீடியோவா என்பது இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.

அதனையும் விசாரித்து வருவதாக அவர் சொன்னார்.

அவ்வீடியோ தொடர்பில் இதுவரை ஒரு போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கிட்டத்தட்ட நிர்வாணக் கோலத்தில் அந்த ஆணும் பெண்ணும் சீனக் கல்லறையில் சல்லாபத்தில் ஈடுபடுவதும், வீடியோ எடுத்த மாது அவர்களை கண்டிப்பதும் வைரலான 38 வினாடி வீடியோவில் தெரிந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!