Latestமலேசியா

சீன மாதுவும் இந்திய ஆடவரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வைரல் வீடியோ; நெட்டிசன்களின் குசும்புத்தனமான கருத்துகள்

அம்பாங் ஜெயா, ஆகஸ்ட் -24 – அம்பாங் ஜெயா, டாத்தாரான் பாண்டான் பிரிமாவில் சாலையில் இரு வாகனமோட்டிகளுக்கு இடையில் நிகழ்ந்த கடும் வாக்குவாதம் வைரலாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

@elangovan5058 என்ற டிக் டோக் கணக்கில் பதிவேற்றப்பட்ட வீடியோவில், சீன மாதுவும் இந்திய ஆடவரும் எதையோ பற்றி காரசாரமாகப் பேசிக் கொள்கின்றனர்.

ஆனால் இரணகளத்திலும் ஒரு குதூகலம் என்பது போல, வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாகக் கருத்துகளைப் பரிமாறி வருகின்றனர்.

என்னதான் வாக்குவாதம் கடுமையாக இருந்தாலும், இருவருமே மலாய் மொழியில் சரளமாக உரையாடுவதைப் பார்க்க நன்றாக இருக்கிறதே என ஒருவர் சொன்னார்.

மற்றொருவரோ, இது உண்மையிலேயே சண்டை தானா அல்லது படப்பிடிப்பா என கேட்கிறார்.

ஒருவேளை தேசிய தினத்தையொட்டி தயாரிக்கப்படும் விளம்பரம் அல்லது நாடகங்களின் படப்பிடிப்பாகக் கூட இருக்கலாமென நெட்டிசன்கள் பேசிக் கொண்டனர்.

ஆனால் அந்த வைரல் வீடியோவில் இருவரும் வாக்குவாதம் செய்துக் கொண்டது ஏன் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!