சுங்கைப் பட்டாணி, மே 23 – சுங்கைப் பட்டாணி , Jalan Sidam Kiriயில் Toyota Yaris கார் ஒன்று டிரெய்லர் லோரியில் மோதியதில் அக்காரில் இருந்த பெண் ஒருவர் மரணம் அடைந்த வேளையில் மற்றொரு பெண் காயம் அடைந்தார். நேற்றிரவு மணி 8.11 அளவில் அந்த விபத்து குறித்த தகவலை அறிந்து உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ஏழு தீயணைப்பு வீரர்கள் சென்றதாக Tikam Batu தீயணைப்பு நிலையத்தின் மூத்த அதிகாரி Shaari Hashim தெரிவித்தார்.
சிறப்பு கருவியை பயன்படுத்தி அக்காரில் சிக்கிக் கொண்ட இரு பெண்கள் மீட்கப்பட்டனர். முகத்தில் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட 40 வயது பெண் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். மற்றொரு பெண் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்ததை சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.