சுங்கைப் பட்டாணி, ஜூன் 8 – சுங்கைப் பட்டாணிக்கு அருகே பெடொங்க்கில் (Bedong) குன்றுப் பகுதியில் சாலையை நிர்மாணிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது கிரேன் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுனர் மரணம் அடைந்தார். நேற்று மாலை மணி 4.10 அளவில் அந்த துயரச் சம்பவம் நடந்ததை குறித்து தகவலை பெற்றதாக சுங்கைப் பட்டாணி தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் துணைத் தலைவர் இஸ்மாயில் முகமட் ஜெய்ன் (Ismail Mohd Zain ) தெரிவித்தார். உடலில் பல இடங்களில் கடுமையாக காயம் அடைந்த 39 வயதுடைய கிரேன் ஓட்டுனர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார். அவரது உடலை மீட்பதற்கு சிறப்பு சாதனங்கள் மற்றும் கிரேன் உதவியும் நாடப்பட்டதாக தீயணைப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
Check Also
Close