கோலாலம்பூர், ஏப் 24 – காஸா மீதான இஸ்ரேல் போரை வாஷிங்டன் ஆதரிப்தால் அமெரிக்கா நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆகக்கடைசி நடவடிக்கையாக கெடா, சுங்கைப் பட்டாணியிலுள்ள McDonald விளம்பரப் பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாகனத்தில் இருந்தவாறு McDonald உணவு பொருட்களை வாங்குவதை அறிவிக்கும் விளப்பரப் பலகையில் வர்ணம் தெளித்து சேதப்படுத்தப்பட்டதோடு ” கொலையாளிகளை புறக்கணிப்போம் , பாலஸ்தீனர்களின் இரத்தம் உங்களது கைகளில் மற்றும் பாலஸ்தீனர்களை விடுவிப்போம் என்ற வாசகங்களும் ” எழுதப்பட்டிருந்தன.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் ஒது ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள்வரை சிறை ,அபராதம் அல்லது அவையிரண்டும் விதிக்கப்படும் உள்நோக்கத்தோடு சேதப்படுத்தியது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 427ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Kuala Muda போலீஸ் தலைவர் Wan Azharuddin தெரிவித்தார். இதுவரை மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எவரும் இன்னும் கைது செய்யப்படவிலையென அவர் கூறினார்.