ஈப்போ, ஏப்ரல் 6 – பேராக் சுங்கை சிப்புட் அருகே சாலை விபத்தில் இரு சகோதரர்கள் உயிரிழக்கக் காரணமான 4WD நான்கு சக்கர வாகன ஓட்டுநர், விசாரணைக்காக இன்று தொடங்கி 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஒரு குத்தகையாளரான 50 வயது அந்நபர், 1987 போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக சுங்கை சிப்புட் போலீஸ் தலைவர் Superintenden Mohd Khaizam Ahmad Shahabudin கூறினார்.
முன்னதாக Taman Desa Salak, Jalan Ipoh- Kuala Kangsar சாலையின் 38-வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த அவ்விபத்தில்,
SMK சிம்பாங் பெலூருவுக்குச் சென்று கொண்டிருந்த 13 மற்றும் 17 வயதுடைய அச்சகோதரர்கள் பலியாயினர்.
Kuala Kangsar-ரில் இருந்து வந்துக் கொண்டிருந்த அந்த 4WD வாகனம், எதிர் திசையில் வந்த அச்சகோதரர்களின் மோட்டார் சைக்கிளை மோதியதில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
போலீசில் புகார் செய்யாமல் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய வாகனமோட்டியை, சாலாக் அருகே செம்பனைத் தோட்டமொன்றில் வைத்து போலீஸ் கைதுச் செய்தது.