சுங்கை பட்டாணி, ஜூலை-31 – கெடா, சுங்கை பட்டாணி தாமான் ரியாவில் உள்ள வீட்டொன்றிலிருந்து அழுகிய நிலையில் மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை jogging சென்ற போது, சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அண்டை வீட்டுக்காரர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தீயணைப்பு மீட்புத் துறையின் உதவியுடன், பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்த போலீஸ், அங்கு கட்டிலில் அழுகிப் போன சடலத்தைக் கண்டது.
68 வயது Him Be Lee என அடையாளம் கூறப்பட்ட அம்மூதாட்டியை, அண்டை வீட்டார் கடைசியாக கடந்த சனிக்கிழமைப் பார்த்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
ரத்த அழுத்தம், தைராயிட் வீக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட அம்மூதாட்டி, கடைசியாக மே மாதம் சிகிச்சைப் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
சடலம் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் குற்ற அம்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் போலீஸ் உறுதிபடுத்தியது.