Latestமலேசியா

சுங்கை பூலோ மருத்துவமனையில் கண்ணாடியை உடைத்த ஆடவர் கைது

சுங்கை பூலோ, செப்டம்பர் 8 – சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையில் இறந்து போன குடும்ப உறுப்பினரைப் பார்க்க முடியாத விரக்தியிலும் மன அழுத்தத்தாலும், ஹெல்மட்டைத் தூக்கி எறிந்து முகப்பிட கண்ணாயை உடைத்து ஆடவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மருத்துவமனையின் தடயவியல் பிரிவு சேவை முகப்பிடத்தில் வியாழக்கிழமை நண்பகலில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

மருத்துவமனை கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்தில் வைத்தே 43 வயது அவ்வாடவர் கைதுச் செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கண்டறியப்பட்டது.

HKL மருத்துவமனையில் அவர் பல தடவை பரிசோதனையையும் மருத்துவ ஆலோசனையையும் தவற விட்டிருப்பதும் தெரிய வந்தது.

பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததன் பேரில் அவர் விசாரிக்கப்படுகிறார்.

அந்நபர் ஹெல்மட்டை வீசி எறிந்து கண்ணாடி உடைந்துச் சிதறிய வீடியோ முன்னதாக வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!