Latestஉலகம்

சுறா மீன்களில் கொக்கேன் போதைப்பொருள்; பிரேசிலில் அதிர்ச்சிக் கண்டுபிடிப்பு

பிரேசில், ஜூலை 24 – பிரேசில் நாட்டின் கடற்கரையோரமாகக் காணப்படும் சுறா மீன்களின் உடல்களில் அதிகமான கொக்கேய்ன் போதைப்பொருள் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் அமைந்துள்ள Oswaldo Cruz Foundation என்னும் ஆய்வக அறிவியலாளர்கள், தெற்கு அட்லாண்டிக் கடற்கரையோரமாக நீந்திக் கொண்டிருந்த 13 Brazilian Sharp nose Sharks வகை சுறாக்களை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது, அந்த சுறாக்கள் எல்லாவற்றின் கல்லீரல் மற்றும் தசையில், அதிகமான கொகேய்ன் போதைப்பொருள் இருப்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இதற்கு முன் சோதனைக்குட்படுத்தப்பட்ட கடல்வாழ் விலங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டதைவிட, 100 மடங்கு அதிக போதைப்பொருள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான சோதனைக்கூடங்களில் போதைப்பொருள் உற்பத்தியாவதால் அங்கிருந்து வரும் கழிவு நீர் மூலம் கெக்கோய்ன் சுறாக்களை எட்டுவதாக அறிவியளார்கள் நம்புகின்றனர்.

அதே வேளையில், போதைப்பொருளைக் கடத்துவோர் பிடிப்பட்டுவிடுவோமோ என பயந்து கடலில் அவற்றைக் கொட்டிச் செல்வதைச் சுறாக்கள் உட்கொள்வதும் ஒரு காரணமாகவும் இருக்கலாம் என கருதுகிறார்கள்.

இதனிடையே, இது போன்ற போதைப்பொருள் உட்கொள்வதால் சுறாக்கள் மனிதர்களை போல போதையில் தலைக்கேறி சுற்றாது என்றாலும், அவற்றின் வாழும் காலத்தை அது குறைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!