புத்ராஜெயா, செப்டம்பர்-24, சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் நுழைந்து சட்டவிரோதமாக இங்கு வேலை செய்வதே, வெளிநாட்டவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படாமல், சிறப்புப் பாதை வழியாக கொண்டுச் செல்லும் நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாகும்.
மலேசிய ஊழல் தடுப்பாணையமான MACC, அக்கும்பலின் அப்புதிய யுக்தியைக் கண்டறிந்துள்ளது.
அக்கும்பல், கடமைத் தவறும் அல்லது விலைப் போகும் அமுலாக்க அதிகாரிகளுக்கு counter setting முறையில் குறிப்பிட்ட பணத்தை லஞ்சமாகக் கொடுத்து விடுகிறது.
இதனாலேயே, ஏராளமான வெளிநாட்டவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிக காலம் தங்கியிருப்பது, முறையான பெர்மிட் இல்லாமல் வேலை செய்வது, கறுப்புப் பட்டியலிடப்படுவதைத் தவிர்க்க ஓடி ஒளிவது போன்ற குற்றங்களைப் புரிவதாக MACC கூறுகிறது.
குறிப்பாக வங்காளதேசிகள், நேப்பாளிகள், மியன்மார் நாட்டவர்களே அதிகளவில் இந்த சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
அவர்களிடம் தலைக்கு 6,000 முதல் 12,000 ரிங்கிட் வரை கட்டணமாக விதித்து அக்கும்பல் பணம் ஈட்டுவதும்
தெரிய வந்துள்ளது.